தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

மரணத்துக்கு ஓப்புவிக்கப்பட்டவன்.

ஓரு வியாதியை நாம் கண்டுபிடிக்கும்போது நாம் கேட்கும் முதல் கேள்வி “இது பொல்லாத வியாதியா? “ஆனால் இந்தக் கேள்வியை நம்முடைய ஆவிக்குரிய வியாதியை (பாவம்) பற்றி அவசியம் கேட்கவேண்டும். நாம் பாவிகளென்பதை நம்மால் ஓத்துக்கொள்ள முடியும். ஆனால் அதின் உண்மையான அர்த்தத்தை நாம் அறிந்துகொள்ள முடியாது. நாம் மனிதர்கள் பொதுவாக முழுமையற்றவர்கள் என்று சிந்திக்கிறோம் அல்லது நாம் “எல்லோரும் தப்புச்செய்கிறோம்” என்ற வசனத்துக்குப் பின்னால் ஓளிந்துகொள்ளுகிறோம். இந்த விளக்கங்கள் மூலமாய் நாம் ஓரு முக்கிய கேள்வியைத் தவிர்த்துக்கொள்கிறோம். நம்முடைய நிலை எவ்வளவு மோசமாயிருக்கிறது? வேதம் அதைப்பற்றிய தகவலை நமக்கு சொல்கிறது.

Lektion6 Frauவேதாகமம் சொல்கிறது: நாம் பாவமுள்ளவர்கள்.

நம்மால் நல்லது செய்ய முடியாதென்று அர்த்தமில்லை. வேதம் இவ்வகையாகக் கூறுகிறது பாவம் நம்முடைய ஓவ்வொரு அம்சத்திலும் இருக்கிறது – நம் சிந்தனையில், நம் உணர்வில், நம் விருப்பத்தில் நம்முடைய மனசாட்சியில். எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகாகேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? (எரேமியா 17:9)  அடிப்படைப் பிரச்சனை வந்து நாம் எந்தசூழ்நிலையில் என்னசெய்தோம் என்பதல்ல முக்கிய பிரச்சனைஎன்னவென்றால் நாம் மனிதர்கள். நாம் தினம் தினம் பாவஞ்செய்கிறோம் ஏனெனில் நம் சொந்த இயற்கை நம்மை மயக்கிவைத்திருக்கிறது. எப்படியெனில், மனுஷனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசையும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்னும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். (மாற்கு 7:21-22)

கடவுளுடைய பார்வையில் ஓவ்வொரு பாவமும் மோசமானது.

இந்த வசனத்தைக் கவனிப்போம் ஏனெனில் இந்த வசனம் பல பகுதிகளை காண்பிக்கிறது, குறிப்பாக நம்முடைய எண்ணங்களும், வார்த்தைகளும் செயல்களும். சிலநேரங்களில் நாம் கொலை மற்றும் களவு போன்றவற்றைத்தான் நாம் பாவம் என்று நினைக்கிறோம். ஆனால் வேதம் பாவத்துக்கு ஒரு எல்லையைப் போடவில்லை அத்தோடு நமக்கு உரிமையையும் தரவில்லை. கடவுளுடைய முழுமையான தரத்தில் இல்லாத எல்லாம் பாவம். எல்லாம் முழுமையற்ற பேச்சு செயல் அல்லது சிந்தனைகள் பாவமாயிருக்கிறது. என் இருதயத்தை சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்? (நீதிமொழிகள் 20:9)  நீங்கள் சொல்வீர்களா ?

பாவம் கடவுளுடைய ஆட்சிக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் எதிராயிருக்கிறது.

பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். (1.யோவான் 3:4) ஓரு கட்டளையும் நம்மைப் பொய்சொல்ல ஏமாற்ற தவறாய்ச் சிந்திக்க அல்லது பாவம் செய்ய வற்புறுத்தவில்லை, ஏனெனில் இது நம்முடைய சொந்தத்தீர்மானம். நாம் கடவுளின் நல்ல எதிர்பார்ப்புகளை வரம்புமீறி அவரை அவமதித்தால் அவர் நம்மை சும்மா விடமாட்டார். தேவன் நீதியுள்ள நியாதிபதி. அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினம் கொள்ளுகிற தேவன். (சங்கீதம்; 7:11)  கடவுள் பாவத்தை நிச்சயம் தண்டிப்பார். நம்முடைய பாவத்தின் தண்டனையை நாம் இந்த வாழ்க்கையில் அனுபவிக்கலாம் ஆனால் முழுமையான தண்டனையை நம்முடைய இறப்புக்குப் பிறகு நியாயத்தீர்பின் நாளில் வரும். ஆதலால் நம்மில் ஓவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். (ரோமர் 14:12)

நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.

Ok